Friday, November 15, 2024
HomeLatest Newsகொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; ஜனாதிபதியாக மஹிந்த!

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; ஜனாதிபதியாக மஹிந்த!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ,பதவி விலகியதை அடுத்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அரசியல் யாப்பின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

கோட்டா பதவி விலகக் கோரி,கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ,காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வந்தது.தற்போது கோட்டா பதவி விளக்கியுள்ள நிலையில்,அரசியல் பின்புலம் அற்ற,நேர்மையான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என போராட்டக்காரர்களும் ,மக்களும் விரும்புகின்றனர்.

இதனை அடிப்படையாக கொண்டு முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ,மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கங்காராவை ஜனாதிபதியாக நியமிக்க பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் விருப்புக்கள் அதிகரித்துள்ளதாக மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இது தவிர எங்களின் விருப்பம் என்ற காஸ் ராக் உடன் சமூக வலைத்தளங்களில் குறித்த இருவரினதும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News