Thursday, December 26, 2024
HomeLatest Newsகனடாவில் புதிய வகை ஒமிக்ரோன் பரவல்!

கனடாவில் புதிய வகை ஒமிக்ரோன் பரவல்!

கனடாவில் புதிய வகை கொரோனாவால் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் BA.2.75 என்ற புதிய கொரோனா வைரஸ் கனடாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை அங்கு 5 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொற்று அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இதுகுறித்து கனடா சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கூறும்போழுது,


“கடந்த கால நிலவரப்படி, ஆரம்ப கட்ட வரையறை அடிப்படையில் கனடாவில் பிஏ.2.75 5 பேருக்கு பாதித்துள்ளது. இந்த துணை பரம்பரையின் வரையறை தெளிவு படுத்தப்படுகிற போது பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மாறுபடலாம்” என தெரிவித்தார்.

Recent News