Saturday, December 28, 2024
HomeLatest Newsமன்னார் – பேசாலையில் பிரதான வீதியை மறித்து போராட்டம்

மன்னார் – பேசாலையில் பிரதான வீதியை மறித்து போராட்டம்

மன்னார் பேசாலை கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை பேசாலை பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னாரில் இன்றைய தினம் (14)லிட்ரோ எரிவாயு விநியோகம் இடம் பெற்றது.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றது

ஆனால் பேசாலை பகுதி மக்களுக்கு லிட்ரோ எரிவாயு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப் படாத காரணத்தால் மக்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறிப்பாக நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் எரிவாயு இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

பிரதான வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போது பேசாலை கிராமத்திற்கு 100 லிட்ரோ எரிவாயு பெற்றுத்தருவதாக பொலிஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Recent News