Thursday, December 26, 2024
HomeLatest Newsபாராளுமன்ற குழு கூட்டமும் இழுபறி நிலையில்!

பாராளுமன்ற குழு கூட்டமும் இழுபறி நிலையில்!

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபன மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் இன்றைய தினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்த கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கடந்த வாரத்தில் கோப் குழுவில் தெரிவித்த தனிப்பட்ட கருத்தை அடிப்படையாக வைத்து எரிபொருள் விலை தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்த கோப் குழு தீர்மானித்திருந்தது.

அந்த கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அக்கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News