Wednesday, December 25, 2024
HomeLatest Newsஜனாதிபதி கதிரையில் அநுர ; காய்நகர்த்தல்கள் தீவிரம்!

ஜனாதிபதி கதிரையில் அநுர ; காய்நகர்த்தல்கள் தீவிரம்!

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43ஆம் படையணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் பத்ரமுல்லயிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கறித்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை அமையும் சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன், தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News