Saturday, December 28, 2024
HomeLatest Newsதென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 14 பேர் உயிரிழப்பு !

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 14 பேர் உயிரிழப்பு !

தென்னாபிரிக்கா தலைநகரின் தென்கிழக்கேயுள்ள ஜோகன்னஸ் பர்க் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு அங்குள்ள மதுபான விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது .

குறித்த மதுபானவிடுதிக்குள் புகுந்த இனந்தெரியாதோர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 11 பேர் வரையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்தநாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Recent News