Friday, December 27, 2024
HomeLatest Newsநாமலின் சண்டியர் கூட்ட அங்கத்தவர் மடக்கிப் பிடிப்பு

நாமலின் சண்டியர் கூட்ட அங்கத்தவர் மடக்கிப் பிடிப்பு

ஜனாதிபதி மாளிகையின் புதர்களுக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் நேற்று நள்ளிரவு போராட்டக்காரர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கைவசம் இருந்த பையில் கூரான கத்தியொன்றும் காணப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

ஜனாதிபதி மாளிகையின் கழிவறைகளில் நிலவும் சனநெரிசல் காரணமாக நபரொருவர் புதருக்குள் புகுந்து சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

இதன் போது அதற்குள் மறைந்திருந்த மர்ம நபரைக் கண்டு ஏனையவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

குறித்த நபர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வன் நாமலின் சண்டியர் கூட்ட அங்கத்தவர் என்று தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக பொலிசாரினால் இலகுவான முறையில் அவர் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News