Thursday, December 26, 2024
HomeLatest Newsஇராஜிநாமா செய்வது எப்போது? பிரதமரிடம் இருந்து விஷேட அறிக்கை

இராஜிநாமா செய்வது எப்போது? பிரதமரிடம் இருந்து விஷேட அறிக்கை

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதுவரை நாட்டின் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல பிரதமராக பணியாற்றுவேன் என்றார்.

இன்று இலங்கையில் எரிபொருள் பிரச்சினையும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக உலக உணவு அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

எனவே தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர் உடனடியாக வேறொரு அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளரும் இந்த வாரம் இலங்கைக்கு வரவுவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News