Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅலரிமாளிகையில் போராட்டக்காரர்களுக்கு விருந்து!

அலரிமாளிகையில் போராட்டக்காரர்களுக்கு விருந்து!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகையை விட்டு வெளியேறப்போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு, அலரிமாளிகையில் காலை உணவு வழங்கும் செயற்பாடும் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் வரலாறு பேசும் அளவில் மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.

Recent News