உலகில் காணப்படும் அசாதாரண நிலைமைகள் காரணமாக அப்பாவி மக்கள் பட்டிச்சாவிற்குட்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோய்ப் பரவல் மற்றும் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போர் ஆகியவை காரணமாக உலகில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியனை கடந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட மூன்று மடங்கு இந்த வருடத்தில் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 828 மில்லியன் மக்கள் போஷாக்கான உணவு இன்றி காணப்படுவதாகவும் இதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் இன்னும் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உலக நாடுகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறவனங்கள் விரைந்து செயற்படுமாறும் இந்த பட்டினிச்சாவை தடுத்து நிறுத்த மாற்று வழிகளை கண்டு பிடிக்குமாறும் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.