கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை பேரணியாகச் செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே கொழும்பு பிரதேசத்தில் உள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் அவசர கதியில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.