Wednesday, December 25, 2024
HomeLatest Newsகணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி! நையப்புடைத்த கணவன்

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி! நையப்புடைத்த கணவன்

வீட்டில் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு எடுத்துக் கொடுத்த மனைவி, கணவரின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், யாழ். வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

எரிபொருளுக்காகக் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்த கணவன் , 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.

இதனை அறிந்த மனைவி, கணவனுக்கு தெரியாமல் அவர் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை எடுத்து தனது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டிற்கு வந்த கணவன் 10 நாட்களாக சேமித்து வைத்திருந்த பெட்ரோலை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பில் மனைவியிடம் விசாரித்த நிலையில், அவர் உண்மையை கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதன்போது அங்கு சென்ற அயலவர்கள், மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கணவரும் யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Recent News