Thursday, December 26, 2024
HomeLatest Newsசஜித் – மைத்திரி இடையில் கொழும்பில் அவசர சந்திப்பு!

சஜித் – மைத்திரி இடையில் கொழும்பில் அவசர சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Recent News