Wednesday, December 25, 2024
HomeLatest Newsநாளொன்றுக்கு 100 கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம்!

நாளொன்றுக்கு 100 கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம்!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் நாளொன்றுக்கு 100 கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய குறித்த 100 கடவு சீட்டுக்களும் ஒரு நாள் அவசர சேவையின் வாயிலாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நான்கு பிராந்திய அலுவலகங்கள் இயங்கவுள்ள நிலையில், சாதாரண கடவு சீட்டு விநியோகமும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையத்தின் வாயிலாக கடவுசீட்டுக்கான ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News