மியன்மார் எல்லைப் பகுதியில் சிறு சிறு இனக்குழுக்களுக்கிடையில் நடைபெற்றவரும் மோதல் சம்பவங்களையடுத்து பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தாய்லாந்தின் ‘ரோயல் தாய் விமானப்படையை” சேர்ந்த F 16 ரக மற்றும் MiG 29 ரக போர் விமானங்கள் மியன்மார் எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும் அதனால் அதிர்ச்சியடைந்த மியன்மார் அரசு உடனடியாக பாடசாலைகளை மூடி, பொது நிகழ்வுகளை ரத்து செய்திருந்தது.
மேற்படி அனுமதியற்ற உள்நுழைதலுக்கான காரணங்களை தாய்லாந்து இன்னமும் வெளியிடவில்லை என்பதும் மியன்மார் தனது அதிருப்திகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தாய்வலாந்தின் அனுமதியற்ற எல்லை மீறலானது மியன்மாரின் எல்லை பலவீனத்தை கண்காணிக்கவா அல்லது எல்லை முறுகல் நிலையை வைத்து தனது பலத்தை மியன்மார் மீது பிரயோகிக்கவா என்பது தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.