Friday, April 4, 2025
HomeLatest Newsபொருளாதார நெருக்கடி; சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய அபாயம்!

பொருளாதார நெருக்கடி; சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய அபாயம்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களில் பலரும் பாலியல் தொழிலாளிகளாக மாறக் கூடிய ஆபத்து இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனால், பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அறிமுகமாகாத நபர்களுடன் பாதுகாப்பின்றி பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெண்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பல நோய் தொற்றுக்கு உள்ளாக கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்கள் பலருக்கு நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவிகளாக மாறக்கூடும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Recent News