இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து உதவித் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனை ஒன்றுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை அமெரிக்க அரசாங்கங்களிற்கு இடையிலான இரண்டு உடன்படிக்கைகள் மூலம் இலங்கைக்கு 37 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.
ஜனநாயக நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்ட திட்டங்கள் குறித்து இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனையின்படி அமெரிக்க சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் ஊடாக 57 மில்லியன் பெறப்படவுள்ளது.
480 மில்லியன் டொலர் கிடைக்கக்கூடிய எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடபோவதில்லை என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிவித்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடமாட்டோம் என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்குப் பின்னர் இலங்கைக்கான எம்.சி.சி. சலுகையை அமெரிக்கா இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.