Wednesday, December 25, 2024
HomeLatest Newsஜனாதிபதி – அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவுக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி – அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவுக்கு இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான, மிகவும் செயற்திறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் தூதுக்குழு நேற்று நாட்டை வந்தடைந்தது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்றிருந்த கலந்துரையாடலை தொடர்ந்து தற்பொழுது ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

Recent News