Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅரச தொழில் வாய்ப்பை எதிர் பார்ப்போரின் கவனத்திற்கு!

அரச தொழில் வாய்ப்பை எதிர் பார்ப்போரின் கவனத்திற்கு!

இலங்கை அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை எதிர் பார்த்துக் காத்திருக்கும் தகைமையுள்ள இளையோரின் கவனத்திற்கு

எதிர்வரும் காலங்களில் அரச வேலை வாய்ப்புக்கள் 25% மாக வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்து விட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அந்நியச் செலாவணி வருமானம் முற்றாக முடங்கிய நிலையில் டொலர் பற்றாக்குறையால் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் வந்து விட்டது .

இதனால் IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கடன் கோரியுள்ளது.நாணய நிதியம் கடன் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பல நிபந்தனைகள் விதித்துள்ளார்கள் அவற்றுள் முதன்மையானது.

1) அரச நிறுவனங்களின் பணியாளர்களை உடனடியாக மட்டுப்படுத்தல்

2) மேலதிக பணியாளர்களை இடை நிறுத்தல் இதனால் நாட்டில் ஏற்கனவே உள்ள அரச உத்தியோகத்தர்களுள் 50% ஆனோர் வேலை இழக்கும் வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் உண்டு

3) பெரும்பாலான அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.

ஆகவே அரச வேலைக்காக காத்திருக்கும் அனைவரும் உங்கள் எதிர்பார்ப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்து தற்சார்ப்புப் பொருளாதாரத்தில் அல்லது தனியார் கம்பனிகளின் தொழில் வாய்ப்பில் அல்லது வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களில் ஆர்வத்தை செலுத்துங்கள் இளமைக் காலம் அற்புதமான மனித வளத்தைக் கொண்டது உழைக்கும் காலத்தை வீண் விரையம் செய்து விடாதீர்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recent News