நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குமிடையே ஆங்காங்கே வாக்குவாதங்களும் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் தனியார் பேருந்துகள் உட்பட பொது போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று தொடக்கம் செயல்படுமா என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை 10 சதவீதமான தனியார் பேருந்துகளுக்கே எரிபொருள் வழங்கப்படுவதாகவும் பல டிப்போக்களில் இன்னும் இந்த நடைமுறைகள் ஆரம்பிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் பயணிகளின் பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.