Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅமெரிக்காவில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள்!

அமெரிக்காவில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள்!

அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வருகின்றது சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களை உடன் மூடுவதற்கு அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த தீர்மானத்தை அமெரிக்க உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் உடனடியாக கால்பங்கு சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் மூடப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒவ்வொரு, ‘ஒரு லட்சத்தி ஐம்பத்தியெட்டாயிரம்’ பெண்களுக்கு ஒரு கருக்கலைப்பு மையம் என்ற விகிதத்தில் சுமார் 790ற்கும் மேற்பட்ட மையங்கள் காணப்படுவதாகவும், மூடப்படும் அனுமதி கிடைத்தால் கிட்டத்தட்ட 202 சட்ட விரோத கருக்கலைப்பு மையங்கள் மூடப்படும் என மேற்படி ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இவ்வாறான சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் பெருகி வருவதால் பெண்கள் சிறுவயதிலேயே தமது கன்னித் தன்மையை இழந்து வருவதாகவும், பருவமடையும் பெண்களை குறிவைத்து இந்த மையங்கள் அதிகம் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேற்படி தீர்மானத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News