சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே ஆண்டில் 50 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது.
இது முந்தைய 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். இதைத்தவிர சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் கணக்குகளில் வைத்திருக்கும் பணமும் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் ரூ.4இ800 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.