Monday, April 21, 2025
HomeLatest Newsபதவி ஆசையில் மூழ்கிப்போயிருக்கும் அரசியல் தலைமைகள் .

பதவி ஆசையில் மூழ்கிப்போயிருக்கும் அரசியல் தலைமைகள் .

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டு அமைச்சுக்களை வெளியிட்டார்.

அந்த வகையில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய அமைச்சு – இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் பவித்ரா வன்னியாராச்சி – பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்ராக ஓரிரு நாட்களில் பதவியேற்பார்கள் என உயர்மட்ட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Recent News