லியானார்டோ டாவின்சியால் 16 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான மோனாலிசா ஓவியம் பிரான்ஸின் பரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோனாலிசா ஓவியத்தை மூதாட்டி போல் உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் சேதமாக்க முயற்சித்துள்ளார் என 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருங்காட்சியத்துக்கு சக்கரநாற்காலியில் மூதாட்டி வேடமிட்ட நபர் ஒருவர் வந்துள்ளார் .
அந்த நபர் திடீரென நாற்காலியிலிருந்து குதித்து மோனாலிசா ஓவியத்தின் மீது கேக் பூசியுள்ளார் .
அதனால் அங்கிருந்தவர்கள் திகைப்படைந்துள்ளனர் . இதன்போது பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் . கேக் ஓவியத்தின் கண்ணாடியின் மேல் பூசப்பட்டதால் ஓவியத்துக்கு சேதாரம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது .
கேக் பூசப்பட்ட ஓவியத்தைப் பார்வையாளர்கள் ஒளிப்படம் எடுக்கும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது