தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாயபீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.
சிறுபோகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்த முறை 315,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகிறது. வழமையாக சுமார் 4 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும். சிறுபோகத்திற்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் அவசியமாகின்றது.
எனினும் தற்போது நாட்டில் இரசாயன உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதோடு அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இந்த முறை சிறுபோக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.