நாடு முழுவதிலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், எரிபொருள் கொள்வனவு செய்ய பணமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊரில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் கோரியுள்ளார்.
கிடைக்கும் எரிபொருட்களே விநியோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.