Saturday, January 18, 2025
HomeLatest Newsமக்கள் கோரினால் மகிந்த மீண்டும் வருவார்! மொட்டு கட்சி நம்பிக்கை

மக்கள் கோரினால் மகிந்த மீண்டும் வருவார்! மொட்டு கட்சி நம்பிக்கை

மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரியவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.

எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார்.

எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார் என டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

Recent News