Thursday, January 23, 2025
HomeLatest Newsஎரிபொருள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய செயலி அறிமுகம்

எரிபொருள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய செயலி அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய மொபைல் போன் செயலி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 10 நாட்களில் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட நேரங்களாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, இன்றைய தினம் மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல், டீசலினை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News