Thursday, January 23, 2025
HomeLatest Newsஎரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும்- எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை!

எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும்- எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை!

நாட்டில் கடந்த சிலமாதங்களாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

நாட்டிற்கு பல தடவைகள் எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் வருகை தந்தாலும் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுகின்றது.

இந்நிலையில்

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் முதல் எரிபொருட்கள் இல்லாது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

அதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருளை வழங்குமாறு கோரி பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இது தொடர்பில் ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்றிச் செல்லுமாறு கோரி, குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் செல்லும் எரிபொருள் பாரவூர்திகளை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தடுத்து, தீ வைப்பதாக அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பிற்காக விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News