Thursday, January 23, 2025
HomeLatest Newsஎனது உயிருக்கு ஆபத்து! அலி சப்ரி கதறல்

எனது உயிருக்கு ஆபத்து! அலி சப்ரி கதறல்

நான் எனது உயிருக்கு பயப்படுகிறேன். என் குழந்தைகள், உறவுகள் விஷயத்தில் பயமாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அலி சப்ரி சற்றுமுன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் யுத்தம் செய்ய இங்கு வரவில்லை. நான் ஒரு சதத்திற்கும் ஊழல் செய்தவனில்லை.

நான் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக 5 வருடங்களில் 42 மில்லியன் வருமான வரி கட்டியுள்ளேன்.

நான் உழைத்த அனைத்து சொத்துக்களுக்கும் மறைக்காமல் வரி கட்டியுள்ளேன்.

என் வருமானத்தில் நூற்றுக்கு 10 வீதம் கூட இந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களினால் கிடைக்கவில்லை.

நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தேவைக்காகவே அரசியலுக்கு வந்தேன் என்றார்.

Recent News