Wednesday, January 15, 2025
HomeLatest Newsஉண்மை சொல்லப்போகிறேன்! ஊடகவியலாளர்களுக்கு மகிந்த அழைப்பு

உண்மை சொல்லப்போகிறேன்! ஊடகவியலாளர்களுக்கு மகிந்த அழைப்பு

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பான உண்மையான வெளிப்பாட்டை வெளியிடவுள்ளதாக , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், சகல ஊடகவியலாளர்களையும் பங்கேற்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நிலைமைகள் மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்த முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News