Wednesday, January 15, 2025
HomeLatest Newsரணில் மக்களின் அன்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்ட தலைவர் அல்ல! பிரபல தேரர் சீற்றம்

ரணில் மக்களின் அன்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்ட தலைவர் அல்ல! பிரபல தேரர் சீற்றம்

ரணில் விக்கிரமசிங்க மக்களின் அன்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்ட தலைவர் அல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(12) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை கூறியிருந்தனர்.

இதன்போது ஓமல்பே சோபித தேரர் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க எடுத்துள்ள தீர்மானமானது சட்ட முறைமைக்கு, அரசியல் அமைப்பிற்கும், கொள்கைக்கும் முற்றிலும் முரணான ஒன்றாகும்.

ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை. மக்கள் ஒரு தீர்வை கேட்டும் போது இவர்கள் வேறு தீர்வை கொடுக்கவே நினைக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க மக்களின் அன்பையும் கெளரவத்தையம் பெற்றுக்கொண்ட தலைவர் அல்ல.

பாராளுமன்றத்தையும் ஒரு தேசிய பட்டியல் எம்.பியாகவே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

ஆகவே மக்கள் ஆணையால் தோற்கடிக்கப்பட்ட நபர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தலைவர் மற்றும் மக்களின் ஆதரவை வென்ற தலைவரே வேண்டும் என்பதே மாநாயக தேரர்களின் கோரிக்கைகும்.

ஆனால் இவர் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் தனிப்பட்ட நோக்கத்திற்காகவே அதிகாரத்திற்கு வருகின்றார். ஆகவே இது பாராளுமன்றத்தின் தெரிவோ அல்லது எதிர்க்கட்சியின் தெரிவோ அல்ல.

ராஜபக்ஷர்களின் விருப்பத்திற்கு அமைய நியமிக்கப்படும் நபராகும். ஆகவே இந்த நியமனம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது. ஜனாதிபதி பாரதூரமான தவறை செய்கின்றார்.

இவ்வாறு தவறுகள் தொடர்ந்தால் மக்களின் ஆணை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை ஜனாதிபதிக்கு எச்சரிக்க விரும்புகின்றோம் என்கிறார்.

Recent News