ஏர்டெல் 3G மொபைல் வலையமைப்பை 24.06.2022 திகதி முதல் நிறுத்துவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தனது அனுமதியை பார்தி ஏர்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
3G வலையமைப்பு நிறுத்தப்பட்ட பின் 2G & 3G செயல்படுத்தப்பட்ட மொபைல் போன்களை மட்டுமே பயன்படுத்தும் ஏர்டெல் சந்தாதாரர்களின் 3G இணைப்பு வலையமைப்பு நிறுத்தப்பட்ட திகதிக்குப் பிறகு தானாகவே துண்டிக்கப்படும்.
3G நிறுத்தம் முதன்மையாக, சிறந்த வேகம் மற்றும் திறனை வழங்கும் 4G சேவைகளை வழங்குவதற்கு அதிர்வெண்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏர்டெல்லின் 3G வலையமைப்பின் நிறுத்தம் காரணமாக இடைநிலைக் காலத்தின் முடிவில் ஏற்படும் சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக ஏர்டெல்லுக்கு 15 மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளாதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.