Monday, December 23, 2024
HomeLatest Newsஜப்பான் – இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் ஆபத்து!

ஜப்பான் – இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் ஆபத்து!

இரத்து செய்யப்பட்ட ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தின் ஆலோசகர்களின் பில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான நட்டஈட்டுக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை மேற்கோள்காட்டி இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சர்வதேச நடுவர் மன்றத்தை நாடுவதை தவிர்ப்பதற்காக, தமது கோரிக்கைகளை பெற்றுத்தர உதவுமாக ஆலோசகர்கள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமை நிதி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலகு தொடரூந்து போக்குவரத்து திட்டத்தை ஒருதலைப்பட்சமாக நிராகரித்ததாலும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இந்தியா மற்றும் ஜப்பானின் முன்மொழியப்பட்ட திட்டத்தை ரத்து செய்ததாலும் ஏற்கனவே ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆலோசகர்களுக்கு நட்டஈடு மறுக்கப்படுகின்றமை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

2020ல் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே செய்த பணிகள், செலவுகள் மற்றும் இழப்பு ஆகியவை ஏற்கனவே 5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாக ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த ஆலோசகர்களுக்கும் நகர அபிவிருத்தி சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை நிதி நிறுவனம் தமது பிரதிநிதிகளை பார்வையாளர்களாக அனுப்பி வருகிறது.

Recent News