Saturday, January 11, 2025
HomeLatest Newsபாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகிறது.

இதற்கமைய இன்று மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்கஇ 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News