Saturday, December 28, 2024
HomeLatest Newsவாழ்க மக்கள் போராட்டம்; வாழ்த்திய மஹிந்த!

வாழ்க மக்கள் போராட்டம்; வாழ்த்திய மஹிந்த!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது.

இந் நிலையில் நாடெங்கும் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளதாவது,

காலி முகத்திடலில் போராடியவர்களுக்கு அன்பான வணக்கங்கள்.
போராட்டக் களத்திற்கு வந்து தனிப்பட்ட அவதூறுகளுக்குப் பதிலடி கொடுப்பது உங்களின் போராட்டத்திற்குப் பாதகமானது என தயவு செய்து என் பெயர் தாங்கிய பதாகைகள் குறித்து எதுவும் செய்யாமல் மௌனம் காப்பதை தவறெனக் கருத வேண்டாம்.
ஜனாதிபதி/பிரதமர் கனவு காண்பவர்களுக்கு உங்கள் போராட்டம் ஒரு பிரச்சார ஊடகமாக மாற அனுமதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி
வாழ்க மக்கள் போராட்டம்! என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News