Saturday, January 11, 2025
HomeLatest Newsசீரற்ற வானிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவுகிறது.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 2 மாவட்டங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 45 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Recent News