Wednesday, December 25, 2024
HomeLatest Newsகோட்டாபயவுக்கு ஆதரவளித்த பாடகிக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!

கோட்டாபயவுக்கு ஆதரவளித்த பாடகிக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பெரும் பங்களிப்புகளை வழங்கிய சிங்கள பாடகி சஞ்ஜீவனி வீரசிங்கவுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஜெஞ்சல்ஸ் நகரில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சஞ்ஜீவனி வீரசிங்க சென்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அத்துடன் அவருக்கு எதிராக ஹூவென சத்தமிட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஞ்ஜீவனி வீரசிங்க, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்து வந்தார்.

தேர்தலில் சஜித் பிரேமதாச முன்வைத்த பெண்களுக்கு சுகாதார நெப்பின்களை வழங்குவது தொடர்பான யோசனையை கடுமையாக விமர்சித்து இருந்தார். தேர்தலுக்கு பின்னர் அவருக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றில் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News