Saturday, January 11, 2025
HomeLatest Newsஎரிபொருள் தட்டுப்பாடு – கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு – கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் டீசலுக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் தங்களுக்கு உரிய முறையில் கிடைக்காதமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய ரேடார் அமைப்புகளை இயக்குவது உட்பட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அத்தியாவசிய சேவைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent News