வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயம் ஒன்றின் பெறுமதி 1000 இலங்கை ரூபாவாக பதிவாகியுள்ளது.
குவைத் தினார் ஒன்று 1000 ரூபாவினைத் தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கையில் சில வங்கிகளில் குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை தொட்டுள்ளது.
இலங்கை வங்கியில் 1 தினார் இன்று 1001.70 ரூபா மற்ற மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.
அத்துடன் மத்திய கிழக்க நாடுகளின் நாணயப் பெறுமதிகளிலும் சடுதியான அதிகரிப்பை கண்டுள்ளது.
அந்த வகையில், பஹ்ரைன் தினார் 797.33 ரூபாய், ஓமன் ரியால் 785.59 ரூபாய், கத்தார் ரியால் 83.98 ரூபாய், சவுதி ரியால் 84.24 ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் 84.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.