Monday, December 23, 2024
HomeLatest Newsஜி7 நாடுகளின் அதிரடி நடவடிக்கை; புடினின் கோரிக்கை முற்றாக நிராகரிப்பு!!!

ஜி7 நாடுகளின் அதிரடி நடவடிக்கை; புடினின் கோரிக்கை முற்றாக நிராகரிப்பு!!!

‘நட்பற்ற’ நாடுகள் இயற்கை எரிவாயுவை இனி ரஷ்ய நாணயத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பில் கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதான ஜி7 நாடுகளும் ரஷ்ய அதிபரின் இந்த கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது.

மேலும் இந்தக் கோரிக்கை ‘தற்போதுள்ள ஒப்பந்தங்களின் தெளிவான மீறல்’ எனவும் ‘ரூபிளில் பணம் செலுத்துவது ஏற்கத்தக்கது அல்ல எனவும் புடினின் கோரிக்கையைப் பின்பற்ற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்துவோம்’ எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Recent News