Monday, December 23, 2024
HomeLatest Newsஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வருகை தரவுள்ளார்.

நாளை இலங்கை வருகை தரவுள்ள அவர், நாளைமறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாளை பிற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் நாளைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்

Recent News