Tuesday, December 24, 2024
HomeLatest News99 ஆவது பிறந்த நாள்..!விமானத்திலிருந்து குதித்து சாகசம் காட்டிய மூதாட்டி..!

99 ஆவது பிறந்த நாள்..!விமானத்திலிருந்து குதித்து சாகசம் காட்டிய மூதாட்டி..!

மூதாட்டி ஒருவர் தனது பிறந்த நாளின் போது விமானத்திலிருந்து குதித்து சாகசம் காட்டியுள்ளமை வாலிப வட்டாரங்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்த சம்பவம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திலே இடம் பெற்றுள்ளது.

அங்கு வசிக்கும் 99 வயதான லக்கி கோயிங் என்ற மூதாட்டியே தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் நோக்குடன் விமானத்திலிருந்து குதித்துள்ளார்.

அந்த வகையில், பல்வேறுபட்ட வீரதீர செயல்களில் ஈடுபடும் லக்கி கோயிங், ஸ்கை டைவிங் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவராக காணப்படுகின்றார்.

அதனால், தனது 99 ஆவது பிறந்த நாளின் போது தனது கொள்ளுப் பேரனுடன் பூமியிலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

ஆயினும், இவர் இதற்கு முன்னரும் ஒரு தடவை ஸ்கை டைவிங் செய்துள்ளதுடன் இரண்டாவது தடவையாகவும் ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அத்துடன், பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த லக்கி கோயிங்கிற்கும், அவரது கொள்ளுப் பேரனும் மிகவும் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர்.

இது தொடர்பாக லக்கி கோயிங் குறிப்பிடுகையில், இந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, வாழ்க்கையில் எவை எல்லாம் சந்தோஷத்தை தருகின்றதோ அதனை திருப்தியுடன் செய்யுமாறும் ஏனையவர்களிற்கு அறிவுறை வழங்கியுள்ளார்.

மேலும், தனது நூறாவது பிறந்தநாளில் எந்த மாதிரியான கொண்டாட்டம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News