Friday, November 15, 2024
HomeLatest Newsஇந்தோனேசியாவில் 99 சிறுவர்கள் இறப்பு! மருந்துக்களுக்கு தடை! 

இந்தோனேசியாவில் 99 சிறுவர்கள் இறப்பு! மருந்துக்களுக்கு தடை! 

இந்தோனேசியாவில் கிடைக்கும் சில மருந்துகளில் சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயகரமான சிறுநீரகக் காயம் (AKI) தொடர்பான பொருட்கள் அடங்கியுள்ளதாக, அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்,

சுமார் 99 சிறுவர்களின் இறப்புகள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளில் சில உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் புடி குணாடி சாதிகின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்தோனேசியா அனைத்து வாய்வழி அடிப்படையிலான மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளது

அத்துடன் குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மையுள்ள டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் கொண்ட மருந்துகள் தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஏற்கனவே கம்பியாவின் அரசாங்கம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால், அங்கு சுமார் 70 குழந்தைகளின் இறப்புகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் நிலையிலேயே இந்தோனேசியாவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Recent News