Thursday, January 23, 2025
HomeLatest Newsபெண்கள் வேலைக்கு செல்வதை 95% மக்கள் விரும்பவில்லை…!ஆப்கான் மந்திரி தகவல்.!

பெண்கள் வேலைக்கு செல்வதை 95% மக்கள் விரும்பவில்லை…!ஆப்கான் மந்திரி தகவல்.!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்வதை 95% மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டின், பொதுப்பணித்துறை துணை அமைச்சர் தீன் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

அங்கு, தலிபான்கள் ஆட்சி அமைத்தது முதல், பெண்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டுவரபட்டதால் பெண்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பொதுப்பணித்துறை துணை அமைச்சர், அங்கு பெண்கள் வேலைக்கு செல்வதை ஐந்து சதவீதமான மக்களே விரும்புவதாகவும், 95 சதவீதமான மக்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டில் இருப்பவர்களாலே பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தூண்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கணவனை இழந்த ஆயிரம் பெண்களுக்கு இஸ்லாமிய அமீரக தலைவர் பிறப்பித்த உத்தரவின்படி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் மற்றும் கலாசாரங்கள் இருப்பதால் மேற்கத்திய நாடுகள் அவர்களது சட்டங்களை ஆப்கானிஸ்தான் மீது திணிக்க முயற்சிக்கக் கூடது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News