குடும்பம் ஒன்றில் 9 குடும்ப உறுப்பினர்களும் ஒரே திகதியில் பிறந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தான் குடும்பமே இவ்வாறு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அந்நாட்டின், லர்கானா பகுதியை சேர்ந்த அமீர் அலி மற்றும் மனைவி குதேஜா தம்பதிக்கு 19 முதல் 30 வயது வரை 7 பிள்ளைகள் உள்ளனர்.
அதில்,பெண் இரட்டையர்கள் மற்றும் ஆண் இரட்டையர்களும் அடங்கலாக அவர்கள் 9 பேருக்குமே பிறந்த திகதி ஒரே நாளாக காணப்படுகின்றது.
அதாவது, ஒகஸ்ட் 1ஆம் திகதி அன்று இந்த 9 பிள்ளைகளும் பிறந்துள்ளமை உலக சாதனையாக மாறியுள்ளதாக கின்னஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கு முன்னர், அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பெப்ரவரி 20ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி இந்த சாதனையை படிந்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனை இந்த பாகிஸ்தான் குடும்பம் முறியடித்துள்ளது.
அது மட்டுமன்றி,அமீர் அலி மற்றும் குதேஜா தம்பதிகள் 1991 ஒகஸ்ட் 1ஆம் திகதி தமது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து செய்துள்ளமையும் சிறப்பாக காணப்படுகின்றது.
அந்த நிலையில், மறுவருடம் ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார்.
இவ்வாறாக, அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்ததும் ஒகஸ்ட் 1 ஆம் திகதியாக இருந்தமை கடவுளின் பரிசு என்று அந்த தம்பதியினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.