Monday, January 27, 2025
HomeLatest Newsஇளைஞர் சீர்திருத்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 9 பேர் கைது

இளைஞர் சீர்திருத்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 9 பேர் கைது

பதுளை – தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 கைதிகளைக் கைது செய்துள்ளதாகச் சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17.042023) அதிகாலை தப்பிச் சென்ற 9 கைதிகளில், 4 பேர் நேற்றைய தினமே கைது செய்துள்ளதாகவும்  எஞ்சிய 5 பேர் இன்றைய தினம் (18.04.2023) கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தப்பிச் சென்றவர்கள் 23, 24, 25, 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்

Recent News