Monday, March 31, 2025
HomeLatest Newsஒரே புதைகுழியில் 87 உடல்கள்…!வெகுஜன படுகொலை என குற்றம்சாட்டிய ஐ.நா..!

ஒரே புதைகுழியில் 87 உடல்கள்…!வெகுஜன படுகொலை என குற்றம்சாட்டிய ஐ.நா..!

ஆப்பிரிக்க நாடான சூடானில், ஒரே புதைகுழிக்குள் 87 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில், இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தீவிரம் அடைந்தது.

இந்நிலையில், இந்த உள்நாட்டு போரினால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை வெகுஜன படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News