Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia News8,640 கி.மீ. தூரம் கால் நடை பயணம்..!370 நாட்களில் மெக்காவை அடைந்து வாலிபர் சாதனை..!

8,640 கி.மீ. தூரம் கால் நடை பயணம்..!370 நாட்களில் மெக்காவை அடைந்து வாலிபர் சாதனை..!

வாலிபர் ஒருவர் 8,640 கி.மீ. தூரம் நடந்து சென்று மெக்காவை அடைந்து சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியை சேர்ந்த 29 வயதான ஷிஹாப் சோட்டூர் என்பவரே இவ்வாறு நடந்து சென்றுள்ளார்.

ஷிஹாப் சோட்டூர் கால் நடையாக மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறாக இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார்.

கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்து,அதன் பின்னர் முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்ற அவர் அங்கு 21 நாட்கள் தங்கியுள்ளார்.

அதையடுத்து மெக்காவுக்கு புறப்பட்ட அவர், மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை 9 நாட்களில் கடந்துள்ளார்.

மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப் சோட்டூரின் சிறு வயது முதல் கனவு என்றும் அதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷிஹாப் சோட்டூர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் நாள் ஒன்றுக்கு 25 கி.மீ.நடந்து முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.

இவர் புனித பயணம் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

ஷிஹாப் நடந்து சென்றே மெக்காவை அடைந்தமையால் மெக்காவுக்கு நடந்து சென்ற சாதனைப் பட்டியலில் இவரும் இடம்பிடித்துள்ளார்.

மேலும், இவர் விசா இல்லாமையால் பாகிஸ்தானின் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதன் மூலம் அவர் தனது முதலாவது தடையை எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News