Friday, January 24, 2025
HomeLatest Newsநிஜ பார்பியாக மாறும் எண்ணத்தில் 82 லட்சம் செலவு..!பல பகுதிகளில் பிளாஸ்டிக்...

நிஜ பார்பியாக மாறும் எண்ணத்தில் 82 லட்சம் செலவு..!பல பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி..!திக்கு முக்காட வைக்கும் பெண்..!

பெண் ஒருவர் பார்பியாக மாற ஆசைப்பட்டு 82 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரஸ்ட் என்ற பெண்ணே இவ்வாறு பணத்தினை செலவு செய்துள்ளார்.

பொதுவாக பெண்களிற்கு பார்பி பொம்மைகளில் ஈடுபாடு இருப்பது என்பது உண்மையே. ஆனால் இங்கு ஒரு 25 வயதான ஜாஸ்மின் ஃபாரஸ்ட் பெண் நிஜ பார்பியாக மாறுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சையும் பிளாஸ்டிக் சர்ஜரியும் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News